மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா... சாலையோரம் எரிக்கப்படும் குப்பையால் பொதுமக்கள் அவதி!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியின் முக்கிய சாலையின் ஓரத்தில் அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு தினமும் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மிகவும் புகைமூட்டம் சூழ்ந்து துர்நாற்றமும் வீசி வந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் புகைமூட்டத்தால் எதிரே எந்த வாகனம் வருகிறது என்று அறியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சாலையோரம் எரிக்கப்படும் குப்பையால் மக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் இதில் இருந்து விடுபட போதிய குப்பை தொட்டிகளை வைத்து தருமாறு அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.