96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மாணவி ஸ்ரீமதி வீட்டின் முன்பு வைத்த பேனரால் தொற்றிய பரபரப்பு: வீட்டின் முன்பு குவிந்த போலீசார்..!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்,
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்புக்கு நீதிகேட்டு கடந்த 17 ஆம் தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. பிரேத பரிசோதனை முடிந்தும், மாணவியின் உடலை நேற்று முன்தினம் வரை, அவரது பெற்றோர் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் வீட்டுக்கு முன்பு அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் புகைப்படத்துடன் பதாகை வைக்கப்பட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த வேப்பூர் காவல்துறையினர் மாணவியின் வீட்டுக்கு சென்று அந்த பதாகையை அங்கிருந்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.