சவுக்கு சங்கரை நிரந்தரமாக வேலையில் இருந்து நீக்கியது; தமிழக அரசு...!!



the-whip-fired-shankar-permanently-tamil-nadu-governmen

நீதித்துறை குறித்து யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு துறையில் அலுவலகராக, சவுக்கு சங்கர் வேலை செய்து வந்தார். 2008-ஆம் வருடம் அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 

தொடர்ந்து பணியிடை நீக்கத்திலேயே இருந்து வந்த சவுக்கு சங்கருக்கு பிழைப்பூதியமாக மாதம் ரூ.43 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த 14-வருடங்களில் ரூ.65 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இதனை கண்டித்திருந்தது. 

இந்நிலையில் சவுக்கு சங்கர் அரசு வேலையில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கருக்கு, இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதனை அவர் வாங்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.