சொந்த முதலாளியிடம் நாமம் போட்ட ஓட்டுநர்.. 30 இலட்சம் அபேஸ்.. சதுரங்க வேட்டை பாணியில் சம்பவம்.!

தேனியை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு தொடர்பு கொண்டவர், தன்னை கோவையை சேர்ந்தவர் என அறிமுகம் செய்து இரிடியம் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், இரிடியம் வாங்க வேண்டும் என்றால் ரூ.30 இலட்சம் பணத்துடன் கோவைக்கு வருமாறும் கூறவே, மனோகரன் ரூ.30 இலட்சம் பணத்துடன் ஓட்டுநர் வேலுவோடு ஏப்ரல் 18 ல் கோவைக்கு வந்துள்ளார்.
அங்குள்ள சிங்காநல்லூர் பகுதியில் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், இவர்களின் விடுதிக்கு வந்த 2 பேர் தங்களை காவல் அதிகாரி என கூறி ரூ.30 இலட்சம் பணத்தை பறித்து தப்பி சென்றுள்ளனர். சுதாரித்த மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, ஓட்டுநர் வேலுவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஓட்டுநர் வேலுவே நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து, வேலு மற்றும் அவரின் நண்பர்கள் 2 பேரை கைது செய்த காவல் துறையினர், இரிடியம் இருப்பதாக போனில் தொடர்பு கொண்ட கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.