மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரியகுளம் எம்.எல்.ஏ-விடம் பணம் பறிப்பு முயற்சி; வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி மிரட்டிய பகீர் சம்பவம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணகுமார் (வயது 48). இவர் திமுக கட்சியை சேர்ந்தவர். அங்குள்ள பாரதி நகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
சரவணகுமாரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத புதிய எண்ணில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. அதனை ஏற்று பேசியபோது, எதிராளிகள் பதில் தெரிவிக்கவில்லை என்பதால் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.எல்.ஏ அழைப்பை துண்டித்த சில மணிநேரத்திற்குள், அவர் பெண் ஒருவருடன் ஆபாச வீடியோ கால் பேசுவது போல சித்தரிக்கப்பட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் பணம் தராத பட்சத்தில், வீடியோ இன்டெர்னட்டில் வெளியாகும் எனவும் மிரட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்துபோனவர் ரூ.10 ஆயிரம் பணத்தையும் அனுப்ப, தொடர்ந்து பணம் கேட்கப்பட்டுள்ளது.
இதனால் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது உறுதியானது.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமே இவ்வாறான சர்ச்சை செயலில் ஈடுபட்டு, அக்கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.