மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 28 நாட்களில், மூக்கு முட்ட மது குடித்த மொடாக்குடி புதுமாப்பிள்ளை சாவு.! தேனியில் பரிதாபம்.!!
திருமணம் முடிந்ததை சிறப்பிக்க நண்பர்களுக்கு சரக்கு பார்ட்டி வைத்து, அளவுக்கு அதிகமாக குடித்து சிக்கன் சாப்பிட்ட புதுமாப்பிள்ளை மணமான 28 நாட்களில் மாண்டுபோனார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், வடுகபட்டி கன்னிமார்கோவில் தெருவில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவரின் மகன் ரமேஷ் பாண்டி (வயது 28). இவர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் வசித்து வரும் பெண்மணி சௌமியா (வயது 19).
ரமேஷ் பாண்டிக்கும் - சௌமியாவுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, கடந்த மாதம் 14 ஆம் தேதி திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்ததை சிறப்பிக்கும் பொருட்டு, நேற்று ரமேஷ் தனது நண்பர்களுக்கு மதுவிருந்து வைத்துள்ளார்.
நண்பர்களுடன் இருந்த ரமேஷ் பாண்டி அளவுக்கு அதிகமான மதுபானம் குடித்த நிலையில், சிக்கனையும் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நண்பர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு ரமேஷை கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் பாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக ரமேஷ் பாண்டியின் மனைவி சௌமியா தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமான 28 நாட்களில் புதுமாப்பிள்ளை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மதுபானம் நாட்டிற்கும், வீட்டிற்கும், உடல் நலத்திற்கும் எதிரி. அது உயிரை கொல்லும்.