மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டு வாசலில் உறங்கிய சகோதரர்களை பாம்பு தீண்டியதால் சோகம்; ஒருவர் பலி; மற்றொருவர் உயிர் ஊசல்.!
வீட்டு வாசலில் படுத்து உறங்கிய சகோதரர்களை பாம்பு தீண்டியதில், 13 வயது சிறுவன் உயிரிழந்தான். 10 வயது சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணியில் வசித்து வருபவர் பாபு. இவர் கூலித்தொழிலாளி ஆவார். பாபுவின் மகன்கள் ரமேஷ் (வயது 13), தேவராஜ் (வயது 10). இவர்கள் தங்களின் குடிசை வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.
சிறுவர்கள் இருவரும் தங்களின் வீட்டின் வெளியே தினமும் உறங்குவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று வெளியே படுத்து உறங்கிக்கொண்டு இருந்த சிறுவர்களை கட்டுவீரியன் பாம்பு கடித்துள்ளது.
இதனால் சிறார்கள் இருவரும் அலறிய நிலையில், பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது பாம்பு கடித்தது உறுதியானது. இதனையடுத்து, பாம்பை அவர்கள் அடித்து கொன்றனர்.
பின்னர், சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்ய, மருத்துவமனையில் சிறுவன் ரமேஷ் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.