மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார தோஸ்துகளின் குழாயடி சண்டை.. பாஸ்ட்புட் கடையின் கடாயை தூக்கி அடித்ததில் ஒருவர் பரிதாப பலி..!
மதுபோதையில் சண்டையிட்ட நண்பர்கள் பாஸ்ட்புட் கடையில் இருந்த கரண்டி, கடாயை வைத்து அடித்துக்கொண்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஸ்டாலின் நகரில் வசித்து வருபவர் குமரேசன் (வயது 29). அங்குள்ள அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் @ லோகேஷ். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். கடந்த அக். 29ம் தேதியில் இருவரும் திருத்தணி பேருந்து நிலையம் அருகே கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தை வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர், போதையில் முருகன் கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த பக்தர்களிடம் வம்பிழுத்து, அவ்வழியாக சென்ற வாலிபரிடம் ரூ.500 பணம் பறித்துள்ளனர். குமரேசன் பணத்தை வாங்கி வாலிபரிடம் கொடுத்துள்ளார். இதனால் குமரேசன் - ஜெகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் குமரேசன் ஜெகனை பாஸ்ட்புட் கடையில் இருந்த கரண்டியால் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், அதே பாஸ்ட்புட் கடையில் இருந்த கடாயினை எடுத்து குமரேசனின் தலையில் பலமாக தாக்கி இருக்கிறார். இதில் அவர் இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்கு துடிதுடிக்க, பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வந்த குமரேசன், மருத்துவமனையில் ஒரு மாதம் உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த திருத்தணி நகர் காவல் துறையினர், ஜெகனை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.