மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாக்லேட் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் பகீர் செயல்.. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்ணீர் குமுறல்.!
பள்ளியில் பயின்று வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 55 மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இதே பள்ளியில் திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் ஜெயகோபி என்பவர், கடந்த 10 வருடமாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயகோபி மாணவியர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். செல்போன் மற்றும் சாக்லேட் கொடுப்பது போல நடித்து சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். இதுகுறித்து வெளியே கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பள்ளியில் மாணவியர்களுக்கு Good Touch மற்றும் Bad Touch தொடர்பாக ஆசிரியைகள் பயிற்றுவிக்கையில், ஜெயகோபியின் செயல்பாடுகளை மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பள்ளிப்பட்டு காவல் துறையினர், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ஆசிரியர் ஜெயகோபியை காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டபோது, பெற்றோர்கள் ஜெயகோபியை வெளுத்தெடுத்தனர். அவர்களிடம் இருந்து ஜெயகோபியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.