நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலக இதுதான் காரணமாம்.!!... இதோ, அவரே கூறும் விளக்கம்..!!



This is the reason why actor Rajinikanth quit politics.... Here is his own explanation..

நடிகர் ரஜினிகாந்த், ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசும்போது அரசியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேசினார். 

சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில், தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் அரசியல் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தொடங்கியது. விட்டது. அந்தச் சமயத்தில் நான் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். அப்படி வெளியே செல்வதாக இருந்தால் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், நான் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றால் முதலில் என் முககவசத்தை கழற்ற வேண்டியிருக்கும். அதேநேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் முடியாத காரியம். இதை மக்களிடம் எப்படி சொல்வது என்ற யோசனையில் இருந்தேன்.

அப்போது என்னுடைய மருத்துவர், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் பேசுகிறேன். ரசிகர்களிடம் நான் விளக்கம் அளிக்கிறேன் என்று சொல்லி எனக்கு துணையாக நின்றார். அதன்பிறகு நான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தேன் என்று கூறினார்.