சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்.. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலையில் படுகாயமடைந்து பரிதாப பலி..!

சாலையில் செல்லும்போது நாய் குறுக்கே வந்து விபத்திற்குள்ளானதில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு, சாலைப்புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர் (வயது 51). இவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆவார். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், சாலைப்புதூர் கிராமத்தில் இருந்து கயத்தாருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது, சாலையில் வந்த நாய் திடீரென சங்கரின் வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில், வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த சங்கரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சங்கருக்கு கனகலட்சுமி என்ற மனைவி, மகள்கள் செல்வ ராதிகா, சண்முக பிரியா, மகன் பொன் சுதாகர் என 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கயத்தாறு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.