மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு ஆதரவா பேசாத நீ செத்துப்போ - நட்பை குத்திக்கொலை செய்த பயங்கரம்.. பகீர் வாக்குமூலம்.!
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவினரான 21 வயது இளைஞர் அளித்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளம், கூவாசிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் குட்டி. இவரின் மகன் அசோக் (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரியில் முதல் வருடம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அசோக் ஊருக்கு வெளியே சென்றிருக்கையில், அப்பகுதியை சேர்ந்த மருதுபாண்டி (வயது 21), சுரண்டையை சேர்ந்த சபரி செல்வம் (வயது 21) ஆகியோர் சேர்ந்து அசோக்கை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, கொலையாளிகளான மருதுபாண்டி மற்றும் சபரி செல்வத்தை அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மருதுபாண்டி அளித்த வாக்குமூலமாவது, "அசோக்கும் - நானும் நண்பர்களாக பழகி வந்தோம்.
எனது உறவினரிடம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பேச்சுவார்த்தை நடத்த, என்னுடன் பணியாற்றி வந்த சபரி செல்வத்தை அழைத்து வந்தேன். அப்போது, எனது உறவினருக்கும் - எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அசோக் நண்பனான எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல், சபரியை எப்படி நீ (வெளியூரை சேர்ந்தவரை) அழைத்து வரலாம் என்று பேசி, என்னை தள்ளவிட்டார்.
இதனால் அசோக்கின் மீது எனக்கு ஆத்திரம் ஏற்படவே, அவரை கொலை செய்யத் திட்டமிட்டேன். சம்பவத்தன்று அவர் தனியே செல்வத்தை பார்த்து, நானும் - சபரியும் சேர்ந்து அவரை கொலை செய்தோம். நாங்கள் உறவினராக இருந்தாலும், நண்பன் என்ற முறையில் அவன் எனக்கு ஆதரவாக பேசாதது விரக்தியை ஏற்படுத்தியது. அதனால் கொலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளனர்.