மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்களை பேருந்தில் ஏற்ற மனமில்லாத அரசு பேருந்து ஓட்டுநர்; வீடியோ வைரலானதால் ஓட்டுநர்-நடத்துனர் பணியிடைநீக்கம்.!
திருநெல்வேலி நகரில், மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி முடிந்ததும், மாணவர்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்த தனியார் பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருந்த நிலையில், தனியார் பேருந்துக்கு பின்புறம் வந்த அரசின் மகளிர் இலவச பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றது.
அப்பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களில் சிலர், வேகத்தடையில் பேருந்தின் வேகம் குறைந்தபோது பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறினர். ஒருசில மாணவர்கள் கீழே விழுந்து காயமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பேருந்தின் ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துனர் முத்துப்பாண்டி ஆகியோரை சரக போக்குவரத்துத்துறை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.