மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரிவாளை காண்பித்து மிரட்டிய கொலை வழக்கு குற்றவாளிகள்; சுட்டுப்பிடித்த நெல்லை தனிப்படை காவல்துறை.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, மேல காடுவெட்டி பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி, கடந்த 22ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சிவசுப்பு, முத்து மணிகண்டன், சூர்யா, வசந்த குமார், இசக்கி பாண்டி உட்பட 5 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, குள்ளம்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நெல்லை தனிப்படை காவல் துறையினர் பெருந்துறைக்கு விரைந்துள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ தலைமையிலான அதிகாரிகள் சுற்றிவளைக்க, ரௌடி சிவசுப்பு அதிகாரிகளை அரிவாள் கொண்டு தாக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து, பாதுகாப்பு கருதி அதிகாரிகள் துப்பாக்கிசூடு நடத்தினர்.
அதன்பின்னரே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிவசுப்பு, முத்து, மணிகண்டன் ஆகியோர் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் மீது திருநெல்வேலி, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குக்குள் நிலுவையில் இருந்திருக்கின்றன.