திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: ஆம்பூர் அருகே கோர விபத்து.. வேன் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி.!
ஆம்பூர் அருகே பணியாளர்களை ஏற்றி சென்ற வேன் - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெற்குன்றி நகரில் இருந்து தொழிலாளர்களை ஏற்றுக்கொண்ட வேன், ஆம்பூரை அடுத்துள்ள காலனி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்றுகொண்டு இருந்தது. இன்று 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் வேன் பயணித்துள்ளது.
இந்நிலையில், ஆம்பூர் தேசியநெடுஞ்சாலையில் உள்ள சோலூர் அருகே வேன் சென்ற போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே உள்ளே சாலைக்குள் புகுந்து பெங்களூர் சென்ற லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், வேனின் ஓட்டுநர் ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய நிலையில், 3 பெண் தொழிலாளர்களும் உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.