திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருப்பத்தூர் பேருந்து விபத்து பணியில் மற்றொரு சோகம்; மீட்பு பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் மாரடைப்பால் மரணம்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, செட்டியப்பனூர் பகுதியில், இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்த அரசு விரைவுப்பேருந்து - சென்னையில் இருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேருந்தின் ஓட்டுனர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினார். 20 பேர் காயமடைந்து திருப்பத்தூர், வாணியம்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆம்பூரில் உள்ள ஏ. கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 42). வாணியம்பாடி காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
முரளிக்கு திருமணம் முடிந்து மனைவி, மகள்-மகன் இருக்கின்றனர். காலை நடந்த விபத்து மீட்பு பணியில் ஈடுபட, தலைமை காவலர் முரளியும் சென்றிருந்தார். விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு அனுப்பி வைத்தபின், முரளி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, காவல் நிலையத்திலேயே நெஞ்சைப்பிடித்தவாறு மயங்கி சரிந்தார். அவரை மீட்ட சக காவலர்கள், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக சில மணித்துளிகளில் உயிரிழந்தார். இந்த சம்பவம் காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வேலூர் சரக ஆணையாளர் முத்துசாமி ஆகியோரும் நேரில் வந்து விசாரணை செய்தனர்.