திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழக - ஆந்திர எல்லையில் தமிழர் அடித்துக்கொலை.. பரபரப்பு தகவல்..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 24). இவர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் மெக்கானிக் கடையில் பணியாற்றி வருகிறார். இந்த கடையில் கனவாய்புதூர் பகுதியை சேர்ந்த திருமலை (வயது 25) என்பவரும் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி இருவரும் தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் எல்லையில் உள்ள பாலாறு புல்லூர் தடுப்பணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இரவில் திருமலை மட்டும் வீட்டிற்கு திரும்பிய நிலையில், யுவராஜ் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜின் குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. திருமலையிடம் விசாரித்த போது எந்த தகவலும் இல்லை. இதனால் யுவராஜின் தந்தை கோபாலன், குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், புல்லூர் தடுப்பணை அருகேயுள்ள வனப்பகுதியில், அடித்து கொலை செய்யப்பட்டது போல யுவராஜ் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.