ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
தொழிலதிபரை கடத்தி நிலம் விற்பனை முயற்சி.. அதிமுக மகளிரணி பிரமுகர் கைது.. திருப்பூரில் அதிர்ச்சி.!
நிலத்தகராறில் தொழிலதிபரை கடத்தி மிரட்டலில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கும்பலுக்கு மூளையாக இருந்த அதிமுக மகளிரணி மாவட்ட துணை செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம், வேலன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் பை மற்றும் சீட் கவர் மொத்த வியாபாரம் செய்யும் தொழில் செய்கிறார். இவருக்கும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 47) என்பவருக்கும் இடையே இடம் வாங்குவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
செல்வி அதிமுக கட்சியில் மகளிரணி மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில், செல்வியின் தூண்டுதலின் பேரில், 7 பேர் கொண்ட கடத்தல் கும்பலானது 19 ஆம் தேதியன்று பாபுவின் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து, அவரை கடத்த முயற்சித்துள்ளது. பாபுவின் மனைவி கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.
இதனைகவனித்த 7 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பி சென்றுவிடவே, பாபு கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு மாநகர ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் விசாரணைக்கு பின்னர் திருப்பூர் கோவில்வழி பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 24), வீரபாண்டியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 20), கோபிநாத் (வயது 24), பெருந்தொலுவையை சேர்ந்த அஜய் (வயது 22), விக்னேஷ் (வயது 25), அதிமுக பிரமுகர் செல்வி, தேனியை சேர்ந்த அருண் குமார் (வயது 39), கேரளா மாநிலம் பாலக்காடை சேர்ந்த பினிஷ் (வயது 43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், சுபாஷ் சந்திர போஸின் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 5 வழக்கு, நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு என ஒட்டுமொத்தமாக 7 வழக்குகள் உள்ளன. ரவிக்குமாரின் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை, 2 மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.
செல்வி தனக்கு சொந்தமான உறவினரின் நிலத்தை விற்பனை செய்ய முடிவெடுத்த நிலையில், அதற்கு ரூ.1 கோடி மதிப்பு கூறப்பட்டுள்ளது. ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கலாம் என நினைத்த பாபு, பின்னாளில் அது வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். இதனால் இருதரப்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. பாபுவை இடம் வாங்க வைக்க கடத்தல் கும்பல் ஏற்பாடு செய்யப்பட்டு, கடத்தல் கும்பலுக்கு இடம் விற்பனை செய்யப்பட்டால் ரூ.20 இலட்சம் என்றும் பங்கு பேசப்பட்டுள்ளது.