மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவாகரத்துக்கு மனைவி மறுப்பு.. ஆத்திரமடைந்த கணவன் பரபரப்பு செயல்., பறிபோன உயிர்.!
மனைவியிடம் விவாகரத்துக்கு கைய்யெழுத்து வாங்க சென்ற கணவன், மனைவி மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, ஆர்.கே பேட்டை பாலபுரம் கிராமத்தை சார்ந்தவர் தமிழ்மணி (வயது 40). இவரின் மனைவி மங்களா (வயது 37). இவர்கள் இருவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5 வருடத்திற்கு முன்னர் கணவன் - மனைவி தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் உள்ள நிலையில், ஒரு மகன் தந்தையிடமும் மற்றொரு மகன் தாயிடமும் வளர்ந்து வருகிறார்கள். கணவரை பிரிந்த மங்களா ஆர்.கே பேட்டை அய்யனேரி கிராமத்தில் தையல் கடை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று காலை நேரத்தில் அய்யனேரி கிராமத்திற்கு சென்ற தமிழ்மணி, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடக்கூறி மனைவியை வற்புறுத்தி இருக்கிறார்.
இந்த விஷயத்திற்கு மங்களா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த தமிழ் மணி மறைத்து எடுத்து சென்ற கத்தியை எடுத்து மங்களாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மங்களா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக ஆர்.கே பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, விரைந்து செயல்பட்டு விசாரணை நடத்தி தமிழ்மணியை சோளிங்கர் அருகேயுள்ள கரிக்கல் கிராமத்தில் கைது செய்தனர்.