8 மணி நேரம்.. 21 நாட்கள்.. வெயிலில் நிற்கும் காவலர்களுக்காக மக்களிடம் மன்றாடும் முதல்வர்!



Tn cm tweets about police and asks people to support

உலகத்தில் பல நாடுகளையும் திக்குமுக்காட வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை நடைமுறையில் உள்ளது.

அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மட்டும் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வெளியில் அனுமதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு உறுதுணையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இதற்கு உறுதுணையாக காவலர்கள் தங்கள் பணியினை திறம்பட செய்து வருகின்றனர். வெளியில் நடமாடும் மக்களிடம் சில காவலர்கள் கெஞ்சுவதும் அறிவுரை கூறி அனுப்புவதும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்டனை அளிப்பதும் என தங்களால் முயன்ற அளவிற்கு மக்கள் வெளியில் நடமாடாமல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tn Cm

உலகமே அஞ்சி மக்களை வீட்டிற்குள்ளே இருக்க அறிவுறுத்தும் சமயத்தில் காவலர்கள் மக்களை காக்க வெளியில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதனை நாம் மறந்து விட கூடாது. 

அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி நாம் வீட்டிலேயே இருந்தால் பாவம் காவலர்கள் வெளியில் வெயிலில் நின்று கஷ்டப்பட தேவையில்லை. தற்போது தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் படும் துன்பங்களைப் பற்றியும் மக்கள் எவ்வாறு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது." என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் குறிப்பிட்டுள்ளது சரியான ஒன்று. மக்களாகிய நாம் கண்டிப்பாக மணசாட்சியோடு வீட்டிற்குள்ளே இருந்துவிட்டால் காவலர்கள் 8 மணி நேரம் வெயிலில் நின்று கஷ்டப்பட தேவையில்லை. மீதமுள்ள நாட்களிலாவது மணசாட்சியோடு நடந்துகொள்வோம். கொரோனாவை ஒழிப்போம்!