பொருளாதாரம் மந்தம் காரணமாக அரசின் நலத்திட்டங்கள் நிறுத்தம்?? - அமைச்சர் பி.டி.ஆர்..!



TN finance minister PTR Speech

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று பட்ஜெட் தாக்கலுடன் நடைபெற்று வருகிறது. 2022 - 2023 பட்ஜெட் தாக்கலில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாடு நிதியமைச்சர் பி‌.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் தாக்கல் குறிப்பில் பேசுகையில், "ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக தமிழக அரசுக்கு ரூபாய் 20,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் தீர்க்கமான நடவடிக்கையால் தமிழ்நாட்டு பொருளாதாரம் அபாய கட்டத்தில் இருந்து முன்னேறத்தொடங்கியுள்ளது‌.

ரஷ்ய போர் காரணமாக பொருளாதாரம் மந்தம் அடைந்துள்ள. அதனை மீட்டெடுக்கும் முயற்சி பெரும் சவாலாக இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அப்படியே செயல்படுத்தப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று பேசினார்.