மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரேக்கிங்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடி திருப்பம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது பொள்ளாச்சி பாலியல் விவகாரம். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவிகளையும் பிழைப்புக்காக சிறிய கடைகளில் பணிக்கு செல்லும் இளம்பெண்களையும் காதல் வலையில் சிக்க வைத்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் வீடியோவும் கைப்பற்றப்பட்டு மேலும் பரப்பரை ஏற்படுத்தியது. இந்த வழக்கு மக்கள் மத்தியில் தீயாய் பரவியதை அடுத்து கடந்த 12-ஆம் தேதி தமிழக காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் இந்த வலக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இருப்பினும் இந்த வழக்கில் பல்வேறு அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து இந்த வழக்கை உடனே CBI கு மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கை CBI க்கு மாற்றியதை அடுத்து அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது தமிழக அரசு. வழக்கு CBI க்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கு குறித்து மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.