தமிழகத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...



Today's petrol, diesel rate in tamilnadu

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப,  இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல்- டீசல் விலை உச்சகட்டத்தை நெருங்கி பெட்ரோல் விலை ரூ.110 வரை உயர்ந்து, டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கியது.

சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

petrol diesel

இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனையாகிறது.