மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..!!
தமிழகத்திலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சில சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி (நாளை) முதல் மீதமுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தமிழகத்தில் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் , 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக பரனூர், வானகரம், செங்குன்றம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மீதம் உள்ள 25 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன் படி மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி மற்றும் எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஒருமுறை கட்டணம் ரூ.5 முதல் ரூ.45 வரையிலும், இருமுறை கட்டணம் ரூ.10 முதல் ரூ.65 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.