மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆற்காடு அருகே விபத்து... திருமண நாளில் சோகம்... கொடூர விபத்தில் தம்பதி பலி!
ஆற்காடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் திருமண நாளன்று கணவன் மற்றும் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆற்காடு அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் மற்றும் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கிஷோர் மற்றும் தஷ்வந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் கிஷோர் எல் கே ஜி படித்து வருகிறார்.
ஈஸ்வரன் சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தங்களது திருமண நாளை முன்னிட்டு அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் சென்று வருவதற்காக ஈஸ்வரன் சங்கீதா மற்றும் அவர்களது மகன் தஸ்வந்த் ஆகியோர் ஈஸ்வரனின் இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கின்றனர். அப்போது ஆற்காட்டில் இருந்து வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் வந்த வாகனத்தில் மோதியதால் தூக்கி வீசப்பட்ட தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு வந்து அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினரை அவர்களது சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சடலங்களை எடுக்க விடுவோம் என அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பின்பு விபத்தில் இறந்த ஈஸ்வரன் மற்றும் சங்கீதா தம்பதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்த விபத்து சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.