மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருநங்கை வேட்பாளர் அமோக வெற்றி.! சமூகத்துக்கே பெருமை... ஆரத் தழுவி மகிழ்ச்சியடையும் திருநங்கைகள்.!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேமுதிக, அமமுக, பாஜக, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா தற்போது வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் கங்கா வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில் 2131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற அவரை சக திருநங்கைகள் ஆரத் தழுவி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்தனர்.