ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு! திமுக சார்பில் திருநங்கை வெற்றி! எங்கு? எவ்வளவு ஓட்டுகள் வித்தியாசம் தெரியுமா?



transgender-won-in-election

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்‌பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி விடுத்து நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு ‌நடந்தது.

முதல்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவானது. இந்நிலையில் இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது . மேலும் இதற்காக தமிழகம் முழுவதும் 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

election result

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றிபெற்றுள்ளார். அதாவது நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருங்கை ரியா என்பவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.