மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து.. 20 பேர் படுகாயம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று பயணம் செய்தது. இந்த பேருந்து கிளியநல்லூர் அருகே செல்கையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள், படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.