மீன் திருவிழாவில் எட்டிப்பார்த்த பாம்பு.. பதறி தெறித்தோடிய மக்கள்.. குதூகலத்தில் ரணகளம்..! சினேக் பாப்புன்னா சும்மாவா..!



Trichy Fish Festival Snake Captured by Peoples

மீன் பிடிக்கும் திருவிழாவில் பாம்புகள் சிக்கியதால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, கன்னிராஜப்பட்டி கிராமத்தில் கன்னிக்குளம் உள்ளது. இக்குளம் கடந்த 12 ஆண்டிற்கு முன்பு நல்ல மழையில் நிரம்பியுள்ளது. அதனைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டில் நிரம்பியுள்ளது. 

இதனால் 12 ஆண்டு கழிந்து மீன்பிடி திருவிழா நடத்தலாம் என கிராம மக்கள் முடிவெடுத்த நிலையில், மக்கள் நேற்று போட்டிபோட்டுக்கொண்டு மீன்களை பிடிக்க சென்றனர். 

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொருவரும் போட்டிபோட்டு மூங்கில் கூடையில் மீன்களை அள்ளிச்சென்றனர். அப்போது, மீன்பிடித்த மக்களின் வலைகளில் 15-க்கும் மேற்பட்ட பாம்புகளும் சிக்கியதால் திடீர் பீதியும் உண்டானது. மீன்களில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி போன்றவை கிடைத்தன.