96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அண்ணனுக்கு "பிறந்தநாள் மாலையை இறுதிநாள் மாலையாக" போட்டு, பால் ஊற்றிய தம்பிகள்.. 7 பேர் கும்பலால் சம்பவம்.!
மண்ணச்சநல்லூர் அருகே திருச்சியில் பிரபல ரௌடியாக வலம்வந்த கௌரி சங்கர் என்பவனை 7 பேர் கும்பல் வெட்டி கொலை செய்து மாலை அணிவித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரின் மகன் கௌரி சங்கர் (வயது 35). இவனின் மீது கொலை, கொள்ளை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் உள்ளூரில் ரௌடியாகவும் வளம் வந்துள்ளான். திருச்சியில் பிரதான ரௌடியாக கருதப்படும் குணா, சுந்தரபாண்டி ஆகியோர் இவனின் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில், நேற்று மண்ணச்சநல்லூர், வெங்கக்குடியில் உள்ள தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் கௌரி சங்கர் இருந்துள்ளான்.
அப்போது, மாலை 6 மணியளவில் சமயபுரம் புதுத் தெருவில் வசித்து கார்த்திக் தனது கூட்டாளிகள் 7 பேருடன் கௌரி சங்கரை பார்க்க வந்துள்ளார். அவர்கள் பிறந்தநாளுக்கு அண்ணன் (கௌரி சங்கர்) ஆசீர்வாதம் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள் வைக்க, அதனை ஏற்றுக்கொண்ட கொலைகாரனோ ஞானி போல ஆசிர்வதிக்க சம்மதம் தெரிவித்துள்ளான். அனைவரும் சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், 7 பேர் கும்பல் கௌரி சங்கரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது.
பின்னர், அவனின் சடலத்திற்கு கையில் பிறந்தநாளுக்கு அணிவிக்க கொண்டு வந்திருந்த பூ மாலையை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர், கௌரி சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக கார்த்திக், சித்தார்த்தன், சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைப்போல, ரௌடி குணா மற்றும் சுந்தர பாண்டியின் கூட்டாளி பிரவீன் என்பவனும் நேற்று கொலை செய்யப்பட்டான்.