#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigNews: தமிழகமே அதிர்ச்சி.. நாடககாதலை ஏற்க மறுத்த சிறுமிக்கு 10 இடங்களில் சரமாரி கத்திக்குத்து.. கயவன் வெறிச்செயல்.. நடுரோட்டில் பயங்கரம்.. மணப்பாறையில் பகீர்.!
காதலிக்க மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமியை நாடகக்காதல் கொடூரன் 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, அத்திகுளம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று மாணவி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டு இருந்துள்ளார்.
அப்போது, திருச்சி இரயில்வே மேம்பாலம் அருகே காத்திருந்த வாலிபன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து உட்பட 10 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளான். மாணவி நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கவே, அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திவரும் காவல் துறையினர், நாடகக்காதல் சம்பவம் நிகழ்ந்ததை உறுதி செய்துள்ளனர்.
மேலும், மாணவியை பொத்தமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கேசவன் (வயது 22) என்பவன் பின்தொடர்ந்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்து வந்த நிலையில், அவனே கொலை செய்ய முயற்சித்தும் அம்பலமானது. தலைமறைவாக உள்ள கேசவனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.