17 வயது மாணவனை இழுத்து ஓடிய 26 வயது ஆசிரியை.. மணப்பாறையில் பரபரப்பு சம்பவம்.!



trichy-manapparai-26-aged-school-teacher-escape-with-17

பதினோராம் வகுப்பு மாணவனை, 26 வயது ஆசிரியை இழுத்து ஓடிய சம்பவம் மணப்பாறை அருகே நடந்துள்ளது. 

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே செயல்பட்டு வரும் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவர் இருக்கிறார். இவருக்கும், பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் 26 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. 

trichy

இந்த நிலையில், 26 வயது ஆசிரியை பதினோராம் வகுப்பு பயிலும் மாணவருடன் ஓட்டம் பிடித்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான காதல் ஜோடிகளை தேடி வலைவீசியுள்ளது. 

மேலும், சம்பந்தப்பட்ட மாணவர் 18 வயதுக்கு கீழே இருப்பதால், ஆசிரியை மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.