குதிரைப்பாலுக்கு எகிறும் மவுசு.. 1 லிட்டர் குதிரைப்பால் ரூ.2500-க்கு விற்பனை.!!



Trichy Manapparai Horse Milk Sales

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அடுத்த வாடிப்பட்டியில் சமீப காலமாகவே குதிரைப்பால் அதிகளவில் மக்களால் விரும்பி  வாங்கப்பட்டு வருகிறது. 

மேலும் பாலசுப்பிரமணியன் என்பவர் நாட்டுக்குதிரை இனங்களை மீட்டெடுப்பதற்காக, வங்கிப்பணியையும் துறந்து குதிரை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

trichy

இந்த நிலையில் திருச்சியில் ஒரு லிட்டர் குதிரைப்பால் ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குதிரைப்பாலில் அதிகளவு புரதச்சத்து நிறைந்து காணப்படுவதால் மக்களும் இந்த விலையில் பாலை வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.