பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
15 வயது காதலியுடன் 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.. வனப்பகுதியில் நடந்தது என்ன?..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, புத்தனத்தம், கருத்தகோட்டங்கிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பொன்னுசாமி. இவரின் மனைவி சித்ரா. தம்பதிகளுக்கு 15 வயதுடைய ஸ்ரீநிதி என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
ஸ்ரீநிதி கடந்த 06ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியதைத்தொடர்ந்து, அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்து, பின் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமி, வாலிபர் ஒருவருடன் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதியில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், சடலமாக கிடந்தது சிறுமி ஸ்ரீநிதி - இளைஞர் அஜித் குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. இவர்கள் சடலமாக மீட்கப்படும் முன் வாட்சப்பில் "பெட்ஷீட் கீழே மிஸ் யு ஆள், போயிட்டு வரேன்" என எழுதப்பட்டு ஸ்டேட்டஸும் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநிதியின் கழுத்தில் தாலியும் இருந்துள்ளது.
இருவரின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால், இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.