96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
விளம்பர பேனரால் நடந்த விபரீதம்..மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.!
விளம்பர பேனரை பொருத்த முயன்றபோது, இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் மேகனா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தொடர்பான விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர் நேற்றிரவு கனமழையால் சரிந்து விழுந்ததை தொடர்ந்து, அந்த குடியிருப்பின் காவலாளி செல்லதுரை மற்றும் பெயிண்டர்கள் சேட், விமல்நாத் ஆகியோர் மூவரும் அதனை தூக்கி செங்குத்தாக நிறுத்தியுள்ளனர்.
அப்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது பேனரில் இருந்த இரும்பு கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த மின்விபத்தில் செல்லதுரை மற்றும் சேட் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அத்துடன் உயிருக்கு போராடிய நிலையில், விமல்நாத்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.