53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அம்மா இருக்கேன் பயப்படாதே! கதறிய தாய்! சுஜித்தை மீட்கும் திக் திக் நிமிடங்கள்.
திருச்சி மாவட்டம் மனப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது 26 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் குழந்தையின் கையில் கயிறு கட்டி மேலே தூக்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் இடையே குழந்தை நலமுடன் இருப்பதாகவும், குழந்தைக்கு தைரியம் கொடுப்பதற்காக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையிடம் பேசிவருகின்றனர்.
குழந்தை சுஜித்திடம் பேசிய அவரது தாய் அம்மா இருக்கிறேன் பயப்படாத செல்லம் என கூற, ம்ம் என குழந்தை பதிலளித்தது. தீபவளிக்காக அனைவரும் சந்தோசமாக காத்திருக்கும் நேரத்தில் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் இருப்பதை நினைத்து அவரது பெற்றோர் கதறி அழுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.