திருச்சியில் அதிர்ச்சி... 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர்.!! காவல்துறை விசாரணை.!!



trichy-police-arrested-a-youngster-for-sexual-abuse-aga

திருச்சியில் 14 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது தொடர்பாக உறவினர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிற்பயிற்சி பள்ளி மாணவி

திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்திருக்கிறார். மேலும் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.

tamilnadu

கர்ப்பமான மாணவி

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மாணவிக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாணவியை சிகிச்சைக்காக மருத்துவரிடம் அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "நம்மள நிம்மதியா விடமாட்டாங்க.. " குடும்பத்தார் எதிர்ப்பு.!! கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.!!

காவல்துறையில் புகார்

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் மாணவியிடம் தனியாக விசாரணை நடத்திய போது அந்த மாணவியின் உறவுக்கார இளைஞர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. 14 வயது சிறுமி கர்ப்பமடைந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் பயங்கரம்... எமானாக மாறிய சகலை.!! கள்ள காதல் படுகொலை!