3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
வேன் கட்டணம் செலுத்தாத மாணவனை விட்டுச்சென்ற ஓட்டுநர்... மடக்கிப்பிடித்து சண்டையிட்ட உறவினர்கள்..! கோபத்தில் டிசி வழங்கிய தனியார் பள்ளி.!
வேன் கட்டணம் செலுத்தாததால் பிள்ளையை அழைத்து செல்ல மறுத்த ஓட்டுநரை தட்டிக்கேட்டதால், வலுக்கட்டாயமாக தனியார் பள்ளி டிசி வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் சித்தீஷ்வரன் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல மாணவன் பள்ளிக்கு செல்வதற்காக வேனில் ஏற முயன்ற போது, 400 ரூபாய் கட்டணம் பாக்கி இருப்பதாக ஓட்டுநர் கூறியுள்ளார்.
அப்போது இரண்டு மணி நேரத்தில் நேரில் வந்து கட்டணத்தை செலுத்திவிடுகிறேன் என்று தாய் உறுதியளித்துள்ளார். ஆனால் ஓட்டுனர் அதனை பொருட்படுத்தாமல் மாணவரை விட்டு சென்றதால், உறவினர்கள் அவரை மடக்கிபிடித்து சண்டையிட்டு சித்தீஷ்வரனை அழைத்துச் செல்ல வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஓட்டுநர் பள்ளி நிர்வாகத்தினரிடம் தெரிவிக்கவே, கோபமுற்ற பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர் வலியுறுத்தியும் கேட்காமல் மாணவனுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் மாணவனின் பள்ளிப்படிப்பு கெடும் நிலை ஏற்பட்டதால், பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முசிறி கல்வி மாவட்ட அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.