மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இடைத்தேர்தலில் போட்டியிடுகிறதா அ.ம.மு.க? பதிலளித்துள்ளார் டிடிவி தினகரன்!
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியையும், எதிர்கட்சியையும் வியக்கவைக்கும் அளவிற்கு டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். இதனையடுத்து நடைபெற்ற கடந்த மக்களவை தொகுதி தேர்தலில் வீழ்ச்சியை சந்தித்தது. இதனையடுத்து அ.ம.மு.க கட்சியில் இருந்து கட்சியை விட்டு நீங்கி வேறு கட்சிகளில் சேர்ந்தனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து பேசிய டிடிவி தினகரன் “தனி சின்னம் கிடைக்கும் வரை போட்டியிடப் போவதில்லை” என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் ஏற்படுவதால், மாநில கட்சிகளை போலவே நிலையான சின்னம் பெற்ற பிறகே போட்டியிடுவது என அமமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வேலூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுவதை தவிர்த்த நிலையில், தற்போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.