ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
சட்ட விரோதமாக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி இருவர் பலி.. போலிஸ் விசாரணை..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் 1-ஆவது தார்வழி பகுதியில் ராமமூர்த்தி தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அவரது நிலம் மலையடிவாரத்தில் இருப்பதால் விவசாய பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைதிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஜெய்குமார், ராமமூர்த்தியின் விவசாய நிலத்தின் வழியாக சென்றுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக மின்வேலியிலிருந்து மின்சாரம் அவர்களை தாக்கியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆம்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வெங்கடேசன் மற்றும் ஜெய்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக மின்வேலி போட்டிருந்த ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.