மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்ததாக தூள் கிளப்பும் உதயநிதி ஸ்டாலின்! வீடு வீடாக சென்று செய்த அசத்தல் காரியம்!!
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி அதிதீவிரமெடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அண்மையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அவர்கள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினும் அதிரடியாக களமிறங்கி பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று திருவல்லிக்கேணி தொகுதி மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, அம்பேத்கர் நகரில் உள்ள வீடுகளுக்கு சென்று 'தடுப்பூசி மூலம் கொரோனா உயிர்கொல்லியை விரட்டுவோம்' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். நான் கூறியதை ஏற்ற அப்பகுதி மக்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதாக உறுதியளித்தனர். pic.twitter.com/dwfxBqfYBp
— Udhay (@Udhaystalin) May 16, 2021
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, அம்பேத்கர் நகரில் உள்ள வீடுகளுக்கு சென்று 'தடுப்பூசி மூலம் கொரோனா உயிர்கொல்லியை விரட்டுவோம்' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். நான் கூறியதை ஏற்ற அப்பகுதி மக்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதாக உறுதியளித்தனர். என்று தெரிவித்துள்ளார்.