திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரியார் உணவகத்தில் இலவச உணவுகள் : உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு..!
பெரியார் உணவகத்தை திறந்து நாம் உணவுகளை இலவசமாக வழங்கலாம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அம்மா உணவகம் மூடப்படலாம் என்ற ஆபத்து இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர். மறுபுறம் கோவையில் பெரியார் உணவகம் திறக்கப்படுவதற்கு முன்பு இந்து முன்னணி அமைப்பினரால் அடித்து நொறுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசும் அம்மா உணவகம் மூடப்படாது என விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் உள்ள அடையாறு முத்தமிழ் பேரவையில் திராவிட பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கலந்துகொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில், "கோயம்புத்தூரில் பெரியார் உணவகம் திறக்கப்படும். அம்மா உணவகம் ஒருபுறம் இருக்கட்டும். நாம் பெரியாரின் பெயரில் பெரியார் உணவகம் தொடங்கி உணவுகளை இலவசமாக வழங்கலாம்" என்று பேசினார்.