மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உளுந்தூர்பேட்டையா? மாடூர்பேட்டையா?.. திரும்பும் திசையெல்லாம் மாடுகள்.. நகராட்சி நிர்வாகம் செய்வது என்ன?.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை நகர், பேருந்து நிலையம் மற்றும் நகரின் பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதாக கடந்த சில மாதமாகவே மாடுகள் திரளாக சுற்றி திரிவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை சந்தை, பேருந்து நிலையம் என்று எங்கு பார்த்தாலும் மாடுகள் இஷ்டத்திற்கு சுற்றி வருகிறது என்றும், இதனால் அங்குள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது சில விபத்துகள் நேர்ந்து இருப்பதாகவும் தெரியவருகிறது.
எங்க உளுந்தூர்பேட்டை என்ற முகநூல் பக்கத்தில், இதுதொடர்பாக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவது குறித்து பல்வேறு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று தெரியவில்லை. உளுந்தூர்பேட்டை பகுதிகளில் மாடுகள் நடுரோட்டில் சுற்றி திரிவது தொடர்கதையாகியுள்ளது.
அசம்பாவிதமான விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்னர் நகராட்சி அதிகாரிகள் சுதாரித்து செயல்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இங்கு வைக்கப்படுகிறது.