மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க புதிய திட்டம்... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி.!
உயிரிழப்பை ஏற்படுத்தி அபரீதமாக பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் தலைமையிலான அரசு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது முந்தைய காலத்தில் இருந்தே பெரும்பாலும் நடைமுறையில் இருந்தாலும், சமீபத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளன. மேலும், மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் திடீரென நடத்தப்படும் துப்பாக்கிசூடு காரணமாக மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
இதனால் துப்பாக்கி கலாச்சாரத்தினை ஒழிப்பதற்கும், துப்பாக்கி விநியோகம் மற்றும் பயன்பாடு விபரங்களில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள ஐயோவா மாகாணத்தில் நடந்த இரவுகேளிக்கை விருந்தில், மர்ம கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 12 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடினர். இவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசி வருகின்றனர். இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தை தவிர்க்க, அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.