சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
#Breaking: டெல்லியில் ஆம் ஆத்மி படுதோல்விக்கு காரணம் என்ன? - திருமாவளவன் ஓபன் டாக்.!

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக 48 தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. இதனால் 23 ஆண்டுக்கு பின் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கவில்லை நிலையில், கடந்த 2015 ல் இருந்து ஆட்சியை தக்கவைத்த ஆம் ஆத்மி கட்சி தனது ஆட்சியை இழக்கிறது.
மும்முனை போட்டி
டெல்லி மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. தேசிய அளவிலான கூட்டணியில், மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து பணியாற்றினாலும், மாநில தேர்தலில் இருதரப்பும் கருத்து முரண் காரணமாக தனியே களம்கண்டு மும்முனை போட்டி ஏற்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: வேங்கைவயல் விவகாரம்; 2 விசிகவினர் கைது.!
இந்த போட்டியில் ஆம் ஆத்மி 22 சட்டப்பேரவை உறுப்பினர்களை தக்கவைத்து கொண்ட தோல்வியை எதிர்கொண்டாலும், காங்கிரஸ் கடந்த 2013 க்கு பின், தற்போது வரை (2015 மற்றும் 2020) நடைபெற்ற 3 சட்டப்பேரவை தேர்தலில், ஒரு உறுப்பினரை கூற பெறவில்லை. இந்த விஷயம் தேசிய அளவில் கவனிக்கப்படுகிறது.
ஒற்றுமை இல்லை, ஈகோவை கைவிடுங்கள்
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி., "இந்தி கூட்டணி கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் தங்களின் ஈகோவை கைவிட வேண்டும். டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது என்பது அதிர்ச்சியை தருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவை டெல்லியில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்புடன் இல்லை. காங்கிரஸ்-ஆம் ஆத்மி ஒற்றுமையுடன் இல்லை. ஈகோ பிரச்சனைகளை இருதரப்பு தலைவர்களும் பின்னுக்கு தள்ள வேண்டும். நாடு, மக்களை காப்பாற்ற சிந்திக்க வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: பெட்ரோல் குண்டு வீசி 21 வயது இளைஞர் கொலை.. அன்புமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி.!