மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியின் கண்முன்னே தந்தை கள்ளகாதலியுடன் உல்லாசம்.. கஞ்சா போதையில் மகளை.., வேலூரில் அதிர்ச்சி.!
மனைவி இறந்த பின்னர் மகளுக்கு தாயாக இருக்க வேண்டிய தந்தை, கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்து, மகளையும் கஞ்சா போதையில் சீரழித்த கொடூர செயல் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, பிரம்மபுரம் டோபிகானா தெருவில் வசித்து வருபவர் குமரன் (வயது 37). இவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். திருட்டு மற்றும் கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களையும் செய்து வந்த குமரனின் மீது அம்பத்தூர், காஞ்சிபுரம், இரத்தினகிரி, வாலாஜா, வேலூர் உட்பட பல காவல் நிலையங்களில் 14 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குமரனின் மனைவி செல்வி பேபி. இந்த தம்பதிகளுக்கு 6 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்த செல்வி பேபி உயிரிழந்துவிட்ட நிலையில், தம்பதியின் 6 வயது மகள் வாலாஜாவை அடுத்துள்ள மேலக்குப்பதில் தாத்தாவின் பராமரிப்பில் இருந்துள்ளார். குமரனும் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
குமரனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் மாமனார் - மருமகன் சண்டை ஏற்படவே, குமரன் தனது மகளை அழைத்துக்கொண்டு காட்பாடி பிரம்மபுரம் டோபிகானா தெருவில் குடியேறி இருக்கிறார். அங்கு, தான் பெற்றெடுத்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், பக்கத்து வீட்டிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்து பழைய காட்பாடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குமரன் மகளுடன் வீடு மாறியுள்ளார். அவ்வப்போது கஞ்சா போதையில் சுற்றிவரும் குமரனுக்கு, பெண்ணொருவருடன் கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து, சிறுமியின் கண்முன்னே கள்ளக்காதல் ஜோடிகள் உல்லாசமாக இருந்துள்ளது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி மகளிடமும் அத்துமீறிய நிலையில், இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். மேலும், மகளை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது குமரனின் இல்லத்தில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், குமரனின் நடத்தையில் அண்டை வீட்டினர் சந்தேகமுற்றுள்ளனர்.
இதுகுறித்து குமரனின் மகளான 6 வயது சிறுமியை அழைத்து விசாரணை செய்யவே, சிறுமி கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எனது தாய் இறந்துவிட்டார். தந்தை பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வருவார். இருவரும் உடலில் துணி இல்லாமல் இருப்பார்கள். என்னிடமும் தவறாக தந்தை நடந்துகொள்வார். இதனை வெளியே சொல்லக்கூடாது என என அடிப்பார். தாத்தா வீட்டில் என்னை கொண்டு எப்படியாவது விட்டுவிடுங்கள்" என்று சிறுமி கதறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரில், பெண்மணியொருவர் காட்பாடி காவல் நிலையத்தில் சிறுமியை அழைத்து சென்று புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், சிறுமி கூறியது உண்மை என்பது அம்பலமானது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை அவரது தாத்தா வீட்டில் ஒப்படைத்தனர்.