மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எந்த நேரமும் செல்போன் தானா? கண்டித்த பெற்றோர்.. விபரீத முடிவால் கண்ணீர்., பறிபோன உயிர்.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, கன்னிகாபுரம் விநாயகர் நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவரின் மகள் ராஜேஸ்வரி (வயது 17).
ராஜேஸ்வரி எப்போதும் செல்போன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த பெற்றோர் கண்டித்து இருக்கின்றனர்.
இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்.
மயங்கிய நிலையில் கிடந்த மகளை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.