யாரெல்லாம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!



vijayabaskar talk about corona

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 8228க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா குறித்து பொதுமக்களிடையே விழ்ப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா வைரசை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

corona

யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் இந்த 3 அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல் மேற்கண்ட அறிகுறிகளும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் கண்டிப்பாக சோதனை செய்து கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.