#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்.!
தன்னுடைய ரசிகர்களால் கேப்டன் என செல்லமாக, அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த். தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். தன்னுடைய புரட்சிகரமான வசனத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
ரமணா, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகர காவல் போன்ற அதிரடி சண்டை காட்சிகள் உள்ள திரைப்படங்கள் இவருடைய வசனத்திற்காகவும், சண்டை காட்சிகளுக்காகவும் மட்டுமே வெற்றி விழாவை கண்டன. இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சினிமாவை போலவே கதாநாயகனாக வளம் வந்தார்.
பின்பு மெல்ல, மெல்ல சினிமாத்துறையிலிருந்து அரசியலில் களம் புகுந்தவர், தொடக்கத்தில் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட இரண்டிலுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஓய்விலிருந்து வருகிறார்.
இத்தகைய நிலையில்தான், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அவர் தன்னுடைய குடும்பத்தோடு, தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இது அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் உடல் மெலிந்த நிலையில், விஜயகாந்த் காணப்படுகின்றார். ஆகவே அதை பார்த்த அவருடைய ரசிகர்கள் எப்படி இருந்த மனிதர் இப்படியாகிவிட்டாரே என்று கவலையுடன், கருத்து தெரிவித்து வருகிறார்கள்.