மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நட்பிற்கு இலக்கணம் கொடுத்து துயரம்... விபத்தில் நண்பன் உயிரிழந்த செய்திகேட்டு தற்கொலை; செஞ்சியில் நெஞ்சை உலுக்கும் சோகம்..!
செஞ்சி அருகே இளைஞர் விபத்தில் உயிரிழக்க, தகவல் அறிந்த நண்பன் தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சார்ந்தவர் திருமால். இவரது மனைவி மஞ்சுளா. தம்பதிகளுக்கு சீனிவாசன் என்ற மகன் இருக்கிறார்.
சம்பவத்தன்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் இருந்து சென்ற காவல்துறையினர், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இவருடன் அதே தெருவில் வசித்து வரும் ஆறுமுகம் - அமுதா தம்பதியின் மகன் பிரபு உயிருக்கு உயிராக பழகி வந்துள்ளார். இருவரும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில், நண்பனின் இறப்பை அறிந்து மனமுடைந்து போன பிரபு, நண்பன் சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன் என்று தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் செஞ்சி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.